Episodios
-
பங்க் குமார் இப்பெயரை கேட்டாலே ஒரு காலத்தில் அலறினர் மக்கள். கல்லூரி படிக்கும்போது உமர் என்பவருடன் சேர்ந்து சிறு தப்புகள் செய்து கொண்டுயிருந்த குமார், அவருடைய கொலைக்கு பிறகு முழுநேர ரவுடியாக மாறினான். கொலை, கற்பழிப்பு, கட்டப்பஞ்சாயத்து என்று கால் பாதிக்காத இடமே இல்லை. இதை பார்த்த காவல்துறை அவனுக்கு தேதி குறித்தது. இருமுறை தப்பிய அவன் இறுதியில் அவன் உயிர் உருவப்பட்டது. அவன் பெங்களுருவில் கைது செய்யப்பட்டனா? இல்லை சென்னையில் சுட்டு கொல்லப்பட்டனா ?
MR.K தொடரை தவறாமல் கேளுங்கள்
-
சிலுக்கிடம் பலர் நெருங்க நினைத்த நேரத்தில் தாடிக்காரர் நெருக்கமானார். பின்னர் பட வாய்ப்புகளை இழந்து, தயாரித்த படங்களால் நஷ்டமும் அடைந்தார் சிலுக்கு ஸ்மிதா. திடீர் என்று ஒருநாள் பிணமாக தூக்கில் தொங்கினார் சிலுக்கு. அவரது உடலுக்கு பெரும் அளவுக்கு யாரும் மரியாதையும் செலுத்தவில்லை. இவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார்.. மர்மம் தொடர்கிறது. யார் அந்த தாடிக்காரர்?
MR.K தொடரை தவறாமல் கேளுங்கள்
-
¿Faltan episodios?
-
ஆந்திர மாநிலம் ஏலூர் என்னும் கிராமத்தில் பிறந்த விஜயலட்சுமி என்னும் சாதாரண பெண் சிலுக்கு ஸ்மிதாவாக மாறியது எப்படி? தமிழ் சினிமாவால் பலரின் மனதில் இடம்பிடித்தார் இந்த விஜயலட்சுமி என்னும் சிலுக்கு ஸ்மிதா. சினிமாவில் கொடிக்கட்டி பறந்த சிலுக்கு, நிஜ வாழ்க்கையில் தோல்வியடைய காரணம் என்ன?
MR.K தொடரை தவறாமல் கேளுங்கள்
-
திண்டுக்கல்லில் சூப் கடை வைத்து நடத்தி கொண்டு இருந்த பாண்டி. சிறிது நாள் கழித்து \'white collar\' பாண்டியாக மாறினான். பல கொலைகள்,வழக்குகள் மற்றும் பல, இதனால் போலீஸின் பார்வையில் பட தொடங்கினான் பாண்டி. பல ரவுடிகள் உடன் இணைந்து பல கொலைகளை செய்தவன் போலீஸின் குண்டுகளுக்கு இறையனான்.
MR.K தொடரை தவறாமல் கேளுங்கள்
-
திருவாரூர் தி.மு.க மாவட்ட செயலாளர் பூண்டி கலைச்செல்வன் பகையின் காரணமாக வெட்டி கொல்லப்பட்டார். கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குரங்கு செந்தில், காக்கு வீரன், கிருஷ்ணா குமார் ஆகிய மூவரும் போலீசில் சரணடைந்தனர். கலைச்செல்வனின் தொண்டர்கள் செல்வத்தின் வீட்டை தரை மட்டமாக்கினார். பதறவைக்கும் அரசியல் கொலைகளில் இதுவும் ஒன்று.
MR.K தொடரை தவறாமல் கேளுங்கள்
-
மனைவியின் காதலனை கொன்ற கணவன்! இங்கிலாந்து செல்லும்போது சில்வியா என்னும் பெண்ணை காதலித்து கல்யாணம் செய்துகொண்டார் நானாவதி. அதன் பின் அகூஜா மற்றும் உறவினர்கள் சில்வியாவுடன் நெருங்கி பழக ஆரம்பித்தனர். பின்னர் அது காதலாக மாறியது தன் காதல் மனைவியின் இரண்டாவது காதலை, அதுவும் அவள் வாயாலேயே கேட்டதும் நொந்துபோன நானாவதி. இறுதியில் அகூஜாவிடம் தன் மனைவியை கல்யாணம் செய்து கொள்ளுமாறு கேட்டான் அதற்க்கு மாட்டேன் சொன்ன அகூஜாவை சுட்டு கொன்றான்.ஒரு கொலைக் குற்றவாளிக்கு ஏன் இவ்வளவு மரியாதை தரப்பட்டது?
MR.K தொடரை தவறாமல் கேளுங்கள்
-
பிரிட்டிஷ் அரசாங்கத்தால் திவான் பகதூர் பட்டம் பெற்ற லட்சுமிநரசிம்ம அய்யரின் பேரன் சூலூர் சுப்பாராவ் பண திமிரு, பெண் ஆசையால் போட்டோகிராபர் குருசாமி பிள்ளையை கொன்றான். ரத்தினா பாய் மேல் ஆசைப்பட்ட சுப்பாராவ் அவருடைய அண்ணன் கையால் கொல்லப்பட்டான் என்ன நடந்தது? பெண் ஆசையால் நடந்த கொடூரம் !
MR.K தொடரை தவறாமல் கேளுங்கள்
-
தளபதி ஸ்டாலின் கவர செங்கல்பட்டு நகரத்தில் நடக்க இருந்த தி.மு.க பொது கூட்டத்தை பிரம்மாண்ட அளவில் ஏற்பாடு செய்த ரவி, இறுதியில் தளபதி ஸ்டாலின் பாராட்டு கூடவே இரங்கல் செய்தியும் படித்தார். யார் இந்த ரவி பிரகாஷ்? குரங்கு குமாரின் முகத்தை கல்லை போட்டு சிதைத்த ரவி பிரகாஷ் கொலை செய்யப்பட்டது ஏன்?
MR.K தொடரை தவறாமல் கேளுங்கள்
-
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் தா.கிருட்டிணன். இருமுறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும், ஒருமுறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தவர். 20.5.2003-ல் மதுரையில் கொலை செய்யப்பட்டார். கொலைக்கு பின்னால் மு.க.அழகிரி இருப்பதாக கூறப்பட்டது. உண்மையில் தா.கிருட்டிணன் ஏன் கொலை செய்யப்பட்டார்? நடந்த சம்பவங்கள் என்ன?
MR.K தொடரை தவறாமல் கேளுங்கள்.
-
1911 ஆம் ஆண்டு தீபாவளி முடிந்து இரு தினங்கள் ஆகி இருந்தது. பூண்டி மிராசுதாரர் வைத்தியநாத பிள்ளையின் மருமகளான தனபாக்கியம் பூட்டிய வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். ஒருபுறம் அவரது கணவர் மறுபுறம் ரத்தம் தோய்ந்த அரிவாள். உண்மையில் கொலை செய்தது யார்?
MR.K தொடரை தவறாமல் கேளுங்கள்.
-
திகில் படங்களில் வரும் சஸ்பென்ஸ் கொலைக் காட்சிகள் போல நிஜ வாழ்கையில் ஒருவரின் வாழ்க்கை இருந்தால் எப்படி இருக்கும்? 1988ம் ஆண்டு இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய கொலை வழக்கில் ஆட்டோ சங்கர் கொலை வழக்கும் மிக முக்கியமான ஒன்று. கௌரி ஷங்கர் ஆட்டோ ஷங்கர் ஆன கதை….
MR.K தொடரை தவறாமல் கேளுங்கள்.