Episodes
-
இந்த உலகத்தில் பெரக்கூடிய பரிசுகள், வெகுமதிகள் சில மணி நேரங்களில் மறைந்து போகும். ஆனால் தேவன் அளிக்கும் இந்த அழியாத கிரீடம் உதிர்ந்து போகாத, தேய்ந்து போகாத,முடிவில்லாத காலங்கள் புதிதாகவே இருக்கூடியது.இது தன்னைப்போல் உன்னையும் அழியாத வராக மாற்றிவிடும்.இத்தகய கிரீடத்தை பெருவதுதான் நமது வாழ்வின் நோக்கமாக இருக்க வேண்டும்.இச்சையடக்கம் என்ற சுபாவத்தை கைக்கொண்டு அழிவில்லாத கிரீடத்தைப் பெற்றிடுவோம்.
-
கிறிஸ்த்துவின் நிமித்தம் துன்பங்கள், சோதனைகள் போராட்டங்களை சகித்து கர்த்தருக்காக இப்பூமியில் வாழ்ந்து தேவனுடைய ராஜ்யம் சேறுகின்ற தேவ பிள்ளைகளுக்காக தேவன் அருளும் வெகுமதி தான் இந்த ஜீவ கிரீடம்.
-
Missing episodes?
-
நித்திய ஜீவன் என்பது ஆண்டவரை முடிவு பரியந்தமும் விசுவாசத்தோடு பின்பற்றுகிற அனைத்து தேவ பிள்ளைகளுக்கும் கிடைக்கக்கூடிய பரலோக வாழ்வு ஆகும்; பரலோக வாழ்வை பெறுவதற்காக மேற்கொள்ளப்படும் வாழ்க்கையை மதிப்பீடு செய்து கர்த்தரால் கொடுக்கப்படும் வெகுமதிகள் தான் கிரீடங்கள் ஆகும்.
-
நாம் செய்யக்கூடிய சிறு சிறு நற்செயல்களை எண்ணி தன்னை ஒரு தியாகிப்போல நினைத்து பெருமை பாராட்டாமல், தேவனுடைய சமூகத்தில் தன்னை தாழ்த்தி தனது பெலவீனங்களை, குறைவுகளை உணர்ந்து தேவ கிருபையைத் தேடினால் அவர் உன்னை நீதிமானாக மாற்றி உன் துன்பத்திலிருந்தும் துயரத்தில் இருந்தும் உன்னை இரட்சிப்பார்.
-
நாம் தேவனைப் பார்த்து அவர் என் தேவன் நான் அவருடைய பிள்ளை என்று சொல்லுவதை பார்க்கிலும், அந்த தேவனே நம்மை பார்த்து நான் உன்னுடைய தேவன் நீ என்னுடைய பிள்ளை என்று சொல்லுவது எவ்வளவு பாக்கியமான விஷயம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அடைய முடியாத, பெற முடியாத எந்த ஒரு விருப்பத்தையும், ஆஸ்தியவையும் உயரத்தையும் விட தேவனே பெரியவர், ஈடு இணை அற்றவர், மற்றும் நமக்குத் தேவையான அனைத்தும் அவரிடத்தில் உள்ளது என்பதை நீங்கள் உணர வேண்டும்
-
கிறிஸ்மஸ் என்பது வெளிப்புற ஆடம்பரங்களோடு நின்று விடாமல் அதில் உண்மை அர்த்தமாகிய கீழ்ப்படிதலை கை கொள்வோம்
ஒரு தனி மனுஷியின் கீழ்ப்படிதல் இவ்வுலகத்திற்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுக்கும் நற்செய்தியாகிய கிறிஸ்மஸை கொண்டு வந்தது போல நீங்களும் நானும் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிவதின் மூலம் இவ்வுலகத்திற்கு சந்தோஷத்தை மகிழ்ச்சியை விடுதலையை கொடுக்கக்கூடிய கிறிஸ்மஸை கொண்டு செல்வோம்.-Let's not stop with the outward pomp of Christmas and embrace the true meaning of obedience
Just as one man's obedience brought Christmas, the gospel of great joy to the world, so you and I, by obeying the Word of God, can bring joy, happiness, and freedom to the world. -
தம்மை நம்புகிற யாவருக்கும் கர்த்தர் கேடகமாக இருக்கிறார் அவர் மீது உள்ள நம்பிக்கையை நாம் எவ்வாறு வெளிப்படுத்த முடியும், நம் நன்னடத்தை மற்றும் அவருடைய வசனத்தின் மீது உள்ள உறுதியான நம்பிக்கை; ஆகியவைகளை கை கொள்வதின் மூலம் தேவனுடைய பாதுகாப்பை பெற்றுக் கொள்ளலாம்.
-
தேவன் நம்மை நேசித்து நம் மீது அளவில்லாத மதிப்பு வைத்திருக்கிறார், ஆகவே அவர் நம்மை அழித்து விடாமல் மீண்டும் நிலை நிறுத்தவே முயற்சிக்கிறான் எனவே நாம் நம்முடைய சோதனையில் விசுவாசம் குன்றி, அவரை விட்டு விலகி விடாமல் அவரிடத்தில் திரும்பி அவருடைய கரத்தில் உள்ள அலங்காரமான கிரீடமாகவும் ராஜமுடியாகவும் ஜொலிப்போம்; அநேகருக்கு ஆசீர்வாதமாக இருப்போம்.
-
கோபம் என்பது மனிதர்களுக்கு தோன்றும் ஒரு கடுமையான உணர்வு அதை கட்டுப்படுத்தாவிட்டால் நம் நண்பர்கள் நம் நற்பெயர் மற்றும் நம் வேலையை கூட இழந்து விடுவோம் திருவசனத்திற்கு செவி சாய்த்து கோபத்தை கட்டுப்படுத்தி பரிபூரணத்தை நோக்கி பயணிப்போம்.
-
தேவன் உங்களை வேறுயாருடனும் ஒப்பிடவில்லை,நீங்கள் அவருடைய தலைசிறந்த படைப்பு.உங்களிடம் இல்லாததை நினைத்து நேரத்தை வீணாக்காதீர்கள். Cell.9600881743.
-
பழைய ஏற்பாடு புத்தகம் - அத்தியாயம்: தொடக்கநூல் (ஆதியாகமம்)
அதிகாரம் 7,8 மற்றும் 9
Email: [email protected]
-
பழைய ஏற்பாடு புத்தகம் - அத்தியாயம்: தொடக்கநூல் (ஆதியாகமம்)
அதிகாரம் 5 மற்றும் 6
Email: [email protected]
-
பழைய ஏற்பாடு புத்தகம் - அத்தியாயம்: தொடக்கநூல் (ஆதியாகமம்)
அதிகாரம் 3 மற்றும் 4
Email: [email protected]
-
பழைய ஏற்பாடு புத்தகம் - அத்தியாயம்: தொடக்கநூல் (ஆதியாகமம்)
அதிகாரம் 1 மற்றும் 2
Email: [email protected]
--------------------------
1 தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தபொழுது,
2 மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது.
3 அப்பொழுது கடவுள், “ஒளி தோன்றுக!” என்றார்; ஒளி தோன்றிற்று. கடவுள் ஒளி நல்லது என்று கண்டார்.
..............