Episódios
-
கடந்த நூற்றாண்டில் தம் இன்னுயிரையும் மக்களுக்காக சமர்ப்பணம் செய்து தொடர்ச்சியாய் வாழ்வை அர்ப்பணித்த இடதுசாரிதோழர்களின் ஆகப்பெரும் முன்மாதிரி தோழர் இரணியன் அவர்களின் சரிதத்தின் கடைசி நாட்களின் காதையை அறிந்து கொள்வது நம்மவர்களின் கடமை!
-
தமிழகத்தில் தற்போது நாம் காணக்கூடிய பெண் தெய்வ கோவில்களில் ஆண் பூசாரிகள் பூசிப்பது எவ்வளவு ஆகப்பெரிய முரண்! ஆண் தெய்வ கோவில்களிலும் பெண்கள் பூசாரிகளாக வழிபாடு செய்த வரலாற்று தகவல்களை பண்பாட்டின் வெளிப்பாட்டு மீதமான கல்வெட்டுக்களில் இருந்து எங்ஙனம் அறிவது. வாருங்கள் கேட்போம்!
-
Estão a faltar episódios?
-
தோழர் மக்சீம் கார்க்கி எழுத்தோவியத்தில் படைக்கப்பட்ட ரஷ்ய நாவலின் தமிழ் வடிவத்தின் கீச்சொலி இது
-
விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தோழர் தொல்.திருமா அவர்கள் தனது நூலான அமைப்பாய் திரள்வோம் தொகுப்பிற்கு 2018 ஆம் ஆண்டு எழுதிய முன்னுரையின் கீச்சொலி வடிவம்!
-
உலக புகழ்பெற்ற எழுத்தாளர் தோழர் மக்சீம் கார்க்கியின் அழியா காவியபடைப்பான தாய் நாவலின் அறிமுக குறிப்புக்களும், தொடக்க அத்தியாயமும் இந்த பகுதியில் இடம் பெற்றிருக்கிறது! தாய் நாவல் 100 மொழிகளுக்கு மேலே உலகெங்கிலும் மொழிப்பெயர்க்கப்பட்டு பல நூறு பதிப்புக்களை பல தசாப்தங்களாக கண்டு வருகிறது. தமிழில் தாய் நாவலை முதன் முதலில் மொழிப்பெயர்த்தவர் தோழர் தொ.மு.சி. ரகுநாதன் அவர்கள் . அவரது மொழிப்பெயர்ப்பும் மொழிநடையும் வார்த்தை தேர்வுகளும் சீரிய கருத்துக்களும் மூலத்தை சிதைக்காமல் கருத்தும் காட்சியும் மிக சிறப்பாய் அமைந்திருக்கிறது. தோழர் தொ.மு.சி அவர்களது நூல்கள் அனைத்தும் நாட்டுடமை ஆக்கப்பட்டு விட்டதால் மிகவும் மகிழ்வுடனே இந்நாவலை மக்களிடம் சேர்ப்பிக்க , ஆர்வமாக வாசிக்க துவங்கி இருக்கிறேன். ஆதரவு தாருங்கள்!
-
1971 -72 ல் சென்னை பச்சையப்பா கல்லூரி ஆண்டு மலரில் இடம் பெற்று தமிழ் இலக்கிய உலகில் மிகுந்த சர்ச்சைக்கு உள்ளான கவிதை இது. பேராசிரியர்கள் எதிர்த்தாலும் பெருவாரியான மாணவர்களிடையே வரவேற்பை பெற்ற கவிதை இது. கேட்டு பாருங்கள். கேட்டுவிட்டு கருத்தை பகிருங்கள்!
-
நவம்பர் 28 & டிசம்பர் 4 2021 ஜனசக்தி இதழில் தோழர் ஜி.மஞ்சுளா அவர்களால் எழுதப்பட்ட போக்சோ சட்டத்தின் சிறார்களுக்கும் ,பெண்களுக்கும் ஆன பாதக சாதக அம்சங்களை குறித்த விழிப்புணர்வு பத்தியின் கீச்சொலி பதிவு இது
-
தலைவி தனிமையில் தன் தலைவனை எண்ணி உருகி புலம்பும் அகப்பொருள் நிறைந்த துயர பாடல்கள் தான் இந்த கீச்சொலி பதிவில்!
-
காதல் கவிதைகள்!
-
அழகிய இனிய தமிழ் கேளுங்கள்
-
தோழிக்காக காத்திருந்து தோழி வராமல் போன துயரில் தலைவன் பாடும் கவி!
-
ஒரு நாள் மாலை பக்கத்து ஆத்தில நடக்கிற கதாக்கலாட்சேபம் !
-
1926 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்ற நபர் குறித்த நினைவுகளை பகிரும் பத்திரிக்கையாளரின் அனுபவ பயணம்!
-
மக்களுக்காக போராடும் தோழர்களுக்காக தியாகம் புரியும் எளிய மக்களின் கதை!
-
பிலஹரி ராகம். பெண்ணின் மனப்பார்வையில் சிந்திக்கும் கவி!
-
எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்களின் சமீபத்திய தொகுப்பான, “பால் பேத வன்முறையும் பங்களாதேஷ் அனுபவமும்' என்ற கட்டுரைத் தொகுப்பை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இத்தொகுப்பில் டாக்கா நகர பயணத்தினூடான தனது அனுபவங்களை விளிம்பு நிலை மக்களோடு தொடர்புபடுத்தி கட்டுரைகளாகக் கொடுத்துள்ளார்.
பத்துக் கட்டுரைகள் அடங்கிய இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள சில கட்டுரைகள் நீண்ட காலமாக நிகழ்ந்து கொண்டிருக்கக் கூடிய பெண்களின் மீதான நேரடியான மற்றும் மறைமுகமான வன்முறைகளைப் பேசுகிறது.
பாலியல் வன்முறை என்பது நேரடியான பலாத்காரமாக இல்லாமல் எப்படியெல்லாம் பால்பேத வன்முறையாக நிகழ்கிறது என்ற கோணத்தில் இவர் குறிப்பிட்டிருக்கும் தரவுகள் அதிர்ச்சியளிக்கின்றன. டாக்காவின் ஒரு பத்திரிகை வெளியிட்ட செய்திகளில் வெளியான சில சம்பவங்களான சிலவற்றை முன்வைக்கிறார்.
ஜம்காரா பகுதியின் பின்னலாடைத் தொழிலாளியான 20 வயது இளம்பெண் நான்கு நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறாள் அவளது கணவன் ஓட்டுனராகப் பணியாற்றுகிறார். வீட்டு வாடகை செலுத்த முடியாத நிலையில் பணத்திற்காக கணவனின் முன்பே இந்த வன்முறை நடந்திருக்கிறது.
தொடர்ந்து இக்கீச்சொலி கேட்டு விட்டு புத்தகத்தை படித்து விட்டு தங்களது விமர்சனங்களை பகிருங்கள். -
மலேயா நாட்டில் உள்ள தனது தோழி ஒருத்திக்கு எழுதும் கடிதம் இது. இக்கடிதத்தின் சேதி உள்ளத்தை உலுக்கும். கேட்டு பாருங்கள். எழுத்தாளர் தோழர் தொ.மு.சி. ரகுநாதன் அவர்கள் நவதேஜ் எழுதிய இச்சிறுகதையை 1953 ல் மொழிப்பெயர்த்து ஜனசக்தி இதழில் வெளியிட்டார் .
-
கங்காவின் பேருந்து பயணத்தில் எழும் மனதின் குரலே இந்த அத்தியாயத்தின் பக்கங்கள்.
-
Love and marriage life!
- Mostrar mais