Episodi
-
சொந்தமாக ஒரு வீடு, என்பதுதான் சம்பளதாரர்கள் பலருடைய வாழ்நாள் கனவே. ஆனால், அண்மைக்காலமாக பிரபல பில்டர்களின் அபார்ட்மென்ட்டுகள் குறித்து வரும் செய்திகள் பலரையும் அச்சத்துக்குள்ளாக்கியுள்ளன. கட்டி சில ஆண்டுகளே ஆன குடியிருப்புகளில் விரிசல்கள் விழுவதும், அடிக்கடி பழுதுகள் ஏற்படுதுவதும் அதைத் தொடர்ந்து குடியிருப்புவாசிகள் போராடுவதும் அதிகரித்துள்ளன. இதனால் சென்னை போன்ற பெருநகரங்களில் வீடு வாங்க திட்டமிட்டிருக்கும் பலரும் குழம்பிப்போயிருக்கின்றனர். எப்படி சிறந்த பில்டர்களைத் தேர்வு செய்வது, இதுபோன்ற சிக்கல்கள் எழுந்தால் என்ன செய்வது என உங்கள் பலரிடமுமே கூட எக்கச்சக்க கேள்விகள் இருக்கலாம். அவற்றிற்கு விடையளிக்கும் விதமாக, நாணயம் விகடனிடம் 'பெடரேஷன் ஆஃப் தமிழ்நாடு ஃபிளாட் அண்ட் ஹவுஸிங் புரமோட்டர் அசோசியேஷன்’ தலைவர் மணி சங்கர் பகிர்ந்துகொண்ட வழிகாட்டல்கள், இந்த வார் The Salary Account எபிசோடில் இடம்பெறுகின்றன.
-The Salary Account Podcast.
-
இன்னும்கூட பெரும்பாலான முதலீட்டாளர்கள் பங்கு முதலீட்டுக்காக டீமேட் கணக்கு வைத்திருந்தாலும், தங்களின் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளை ஃபோலியோ வடிவத்திலேயே வைத்திருக்கிறார்கள். மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகளை டீமேட் வடிவில் வைத்திருப்பதன் நன்மைகளை அவர்கள் உணராமல் இருப்பது இதற்குக் காரணமாக இருக்கலாம். சிலர், டீமேட் வடிவில் ஃபண்ட் யூனிட்டுகளை வைத்திருப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் பற்றி நன்கு அறிந்திருந்தாலும் அவர்களுடைய மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகள் ஏற்கெனவே டீமேட் வடிவில் இருப்பதாகத் தவறாக நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால், நிஜத்தில் அவர்களுடைய ஃபண்ட் யூனிட்டுகள் பாரம்பர்ய ஃபோலியோ வடிவில்தான் இருக்கின்றன. இதுகுறித்து இன்றைய எபிசோடில் விரிவாகப் பார்ப்போம்.
-The Salary Account Podcast
-
Episodi mancanti?
-
பங்குச்சந்தை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருப்பதால் பலரும் தங்கள் முதலீடுகளை இங்கே முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். அதிலும் குறிப்பாக மிட்கேப், ஸ்மால்கேப் பங்குகளுக்கு முதலீட்டாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கிறது. இந்த சூழ்நிலையில் நீங்கள் இவற்றில் முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தாலோ அல்லது ஏற்கெனவே முதலீடு செய்திருந்தாலோ என்ன செய்ய வேண்டும்?
-The Salary Account
-
நம்முடைய குடும்பத்தினரின் வளமான எதிர்காலத்துக்காக சில முக்கியமான நிதி சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பழக்கம் நம்மவர்கள் இடையே அதிகரித்திருக்கிறது. அதில் முதன்மையான ஒன்றுதான் டேர்ம் லைஃப் இன்ஷூரன்ஸ் (Term Life Insurance) எடுப்பது. அதாவது, எதிர்பாராத விதமாக குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபருக்கு இறப்பு ஏற்பட்டால் குடும்பத்துக்கு நிதி பாதுகாப்பை வழங்கும் வேலையை இந்த டேர்ம் லைஃப் இன்ஷூரன்ஸ் செய்கிறது. இப்படி டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கும் நபர்கள் பலரும் ரூ.1 கோடிக்கு இன்ஷூரன்ஸ் எடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இது சரியா, உங்களுக்கேற்ற தொகை எவ்வளவு? இந்த வார The Salary Account எபிசோடில் பார்ப்போம்.
-The Salary Account Podcast.
-
நம்மில் பெரும்பாலானோர், ‘‘பணத்தைச் சேமிக்க முடியவில்லையே, முதலீடு செய்ய பணம் இல்லையே...’’ என்று புலம்புவதைப் பார்க்க முடிகிறது. இவ்வளவுக்கும் அவர்கள் அதிக சம்பளம் வாங்குபவர்களாக, நன்கு சம்பாதிப்பவர்களாக இருக்கிறார்கள். பிறகு, எப்படி அவர்களால் பணத்தைக் கொஞ்சம்கூட சேமிக்க முடியாமல் போகிறது.
இதற்கு முக்கியமான காரணம், அவர்களேதான். தங்களை மனரீதியாக, செயல்ரீதியாக சிறிது மாற்றிக்கொண்டால் இவர்கள் நிச்சயம் அதிகமான அளவில் பணத்தை சேமிக்க முடியும். அதற்கான வழிகள் குறித்து இந்த வார The Salary Account எபிசோடில் விளக்குகிறார் நிதி ஆலோசகர் சிவகாசி மணிகண்டன்.
-The Salary Account Podcast
-
2022-23 (மதிப்பீட்டு ஆண்டு 2023-24)-ம் நிதி ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை சம்பளதாரர்கள் வரும் ஜூலை 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இதை செய்யும்போது கவனிக்கவேண்டிய விஷயங்கள், தவிர்க்கவேண்டிய தவறுகள் குறித்தெல்லாம் கடந்த வார The Salary Account எபிசோடில் நாம் பார்த்தோம். இன்றைக்கு வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்தபின் செய்யவேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்.
-The Salary Account podcast.
-
முடிந்த 2022-23-ம் நிதி ஆண்டுக்கான (மதிப்பீட்டு ஆண்டு 2023-24) வருமான வரிக் கணக்குத் தாக்கலை சம்பளதாரர்கள் 2023 ஜூலை 31-ம் தேதிக்குள் மேற்கொள்ள வேண்டும் என்பது வரித்துறை நடைமுறை. பணிபுரியும் நிறுவனம், 2022-23-ம் ஆண்டுக்கான படிவம் 16-ஐ (Form 16) அளித்திருக்கும் பட்சத்தில் வரிக் கணக்கு தாக்கலை மேற்கொள்ளலாம். அப்படி நீங்கள் வரிக்கணக்குத் தாக்கல் செய்யும்போது, தவிர்க்க வேண்டிய தவறுகள் குறித்து இந்த வார The Salary Account எபிசோடில் விளக்குகிறார் ஆடிட்டர் டாக்டர் அபிஷேக் முரளி.
-The Salary Account Podcast.
-
ஒருவர் புதிய ஃபண்டுகளில் முதலீடு செய்யும் முன்பு கவனிக்கவேண்டிய அம்சங்கள் என்ன, ஏற்கெனவே உள்ள மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதற்கும் புதிய ஃபண்டுகளில் முதலீடு செய்வதிற்கும் இடையே இருக்கும் வித்தியாசம் என்ன, எனப் புதிய முதலீட்டாளர்களின் மனதில் பல்வேறு கேள்விகள் இருக்கலாம். அவற்றிற்கு விடையளிக்கிறது இந்த வார The Salary Account எபிசோடு.
-The Salary Account Podcast
-
முதல்முறையாக மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் பலருக்கும், நிபுணர்களால் அதிகம் பரிந்துரைக்கப்படுவது கடன் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள்தான் (Debt funds). பணவீக்கத்தை தாண்டிய லாபம் மற்றும் குறைந்த ரிஸ்க் என்பதே அதற்கு காரணம். ஆனால், மார்ச் 31, 2023-ம் தேதி வரை இந்தியாவில் மிகவும் லாபகரமான முதலீடாக இருந்த இந்த கடன் ஃபண்டுகள் தற்போது பிற ஃபிக்ஸட் டெபாசிட்டுகள் அளவுக்கு மட்டுமே லாபம் கொடுப்பவையாக மாறியிருக்கின்றன. இதற்கு என்ன காரணம்? அப்படியெனில் இனி இதில் லாபம் பார்ப்பது எப்படி?
-The Salary Account Podcast
-
தங்கம் வெறும் ஆபரணமாக மட்டுமன்றி, நம் குடும்பங்களில் ஒரு முதலீட்டு வாய்ப்பாகவே தொடர்ந்து இருந்து வருகிறது. பாதுகாப்பான முதலீடு என்பதால் முதலீட்டு ஆலோசகர்களும் குறிப்பிட்ட அளவு தங்கத்தை முதலீட்டு போர்ட்ஃபோலியோவில் வைத்திருக்க அறிவுறுத்துவார்கள். ஆனால், இவர்கள் சொல்வது `பேப்பர் கோல்டு' எனப்படும், தங்கம் சார்ந்த வேறு முதலீட்டு வடிவங்கள். ETF, மியூச்சுவல் ஃபண்ட் என தங்கத்தில் முதலீடு செய்ய பல்வேறு வழிகள் இருந்தாலும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்ற ஒன்று, ரிசர்வ் வங்கி வெளியிடும் தங்கப்பத்திரங்கள் (Sovereign Gold Bonds). நடப்பு ஆண்டில் இன்றைக்கு (ஜூன் 19) இந்தப் பத்திரங்களை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி. இதில் இருக்கும் சிறப்பம்சங்கள் என்ன? இது யாருக்கு ஏற்ற முதலீடு?இந்த வார The Salary Account எபிசோடில் பார்ப்போம்.
-The Salary Account Podcast
-
பங்குச்சந்தையில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் மற்றும் ஏற்கெனவே முதலீடு செய்தவர்கள் என இருதரப்பினரிடையேயும் உள்ள ஒரு பொதுவான சந்தேகம், இந்திய பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வதைவிட, அமெரிக்க பங்குச்சந்தைகளில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்குமா என்பதுதான். இதற்கான விடையை சில ஒப்பீடுகளுடன், இந்த வார The Salary Account எபிசோடில் பார்ப்போம்.
-The Salary Account.
-
மாதந்தோறும் சம்பளம் பெறுபவர்களுக்கே, நீண்டகால நிதி இலக்குகளை அடைவதற்கு, அதைத்தாண்டி இரண்டாவது வருமானம் என ஒன்று தேவைப்படுகிறது. இதற்காகத்தான் பலரும் முதலீட்டைத் தேர்வு செய்கிறார்கள். இந்நிலையில் பணி ஓய்வு பெற்றவர்கள் பற்றி சொல்லவே வேண்டாம். ஓய்வுக்கால தொகுப்பு நிதி தவிர்த்து இன்னும் நல்ல முதலீடுகளைத் தேர்வு செய்து திட்டமிட்டால் மட்டும்தான், உயரும் பணவீக்கத்திற்கேற்ப வாழ்க்கைச் செலவுகளை சமாளிக்க முடியும். அதற்கான 6 வழிகளை இந்த வார The Salary Account எபிசோடில் தெரிந்துகொள்வோம்.
-The Salary Account.
-
தமிழில் ஒரு நல்ல பழமொழி சொல்வார்கள் `தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்.' பழக்கம் என்பது பெரும்பாலும் மாறவே மாறாது. அந்தப் பழக்கத்தையேதான் திரும்பத் திரும்ப செய்து கொண்டிருப்போம். அப்படியான ஒரு பழக்கம்தான் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்வது. முதலீடு செய்ய திட்டமிட்டதும், சம்பளதாரர்கள் பலரும் முதல் முதலீடாக வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டில்தான் பணத்தை முதலீடு செய்வார்கள். ஃபிக்ஸட் டெபாசிட் ரொம்ப பாதுகாப்பானது, நிலையான வருமானம் தரக்கூடியது, எளிதில் பணமாக்கக்கூடியது எனப் பல வசதியான அம்சங்கள் இருப்பதால் ஃபிக்ஸட் டெபாசிட் அதிக வரவேற்பு கொண்ட முதலீடாகவே இருக்கிறது. இதைவிட கூடுதலாக லாபம் தரும் முதலீட்டு திட்டங்கள் என்னென்ன? இன்றைய எபிசோடில் பார்ப்போம்.
-The Salary Account Podcast
-
பணவீக்க விகிதம் (Inflation) என்கிற விலைவாசி உயர்வை நம் முதலீட்டை விழுங்கும் பூதம் எனலாம். இது பணத்தின் மதிப்பை மிகவும் குறைத்து விடுகிறது. 25 ஆண்டுகளுக்குமுன் நீங்கள் ₹1 கோடி வைத்திருந்தால், அதை வைத்து சென்னை புறநகரில் கிட்டத்தட்ட 50 சென்ட் வீட்டு மனைக்கான இடம் வாங்கியிருக்க முடியும். இன்றைக்கு 2023–ம் ஆண்டில் ₹1 கோடியை கொண்டு 5 - 8 சென்ட் இடம்கூட வாங்க முடியாது. அந்த அளவுக்கு நிலத்தின் விலை உயர்ந்திருக்கிறது. நிலம் மட்டுமல்ல, நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களின் விலையும் பல மடங்கு அதிகரித்திருக்கிறது.
அதே நேரத்தில், அவர் அந்த ₹1 கோடியை ஆண்டுக்கு 10% வருமானம் தரும் நிதித் திட்டங்களில் முதலீடு செய்திருந்தால், அது இப்போது ₹10.83 கோடியாக அதிகரித்திருக்கும். அந்தப் பணத்தைக் கொண்டு இன்று அவரால் தாராளமாக 50 சென்ட் இடம் வாங்க முடியும். இதிலிருந்து நாம் முக்கியமாகத் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம், பணவீக்க விகித பாதிப்பிலிருந்து தப்பிக்க வேண்டும் எனில், பணத்தை நல்ல லாபம் தரும் முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வது மட்டும்தான் ஒரே வழி. இதுகுறித்துதான் இந்த வார The Salary Account எபிசோடில் பார்க்கப்போகிறோம்.
-The Salary Account
-
எதிர்காலத் தேவைகளுக்காக அதிகம் சேமிப்பதாக நினைத்து, நம்மில் பலர் அடிக்கடி சில தவறுகளைச் செய்கிறோம். அப்படி அன்றாட வாழ்வில் செய்யும் தவறுகள் என்னென்ன, அவற்றை எப்படி தவிர்க்கலாம் என்பது குறித்துதான் இன்றைய The Salary Account எபிசோடில்..
Credits:
Voice :Radhika|
Sound Engineer : R. Navin Bala |
Podcast Channel Executive : Prabhu Venkat. P |
Podcast Network Head : Niyas Ahmed. M.
-
அடுக்குமாடி குடியிருப்பு வீடு வாங்கத் திட்டமிட்டுக்கொண்டிருப்பவரா? உங்களுக்கு உதவும் வகையில், வீடு வாங்கும்போது கவனிக்கவேண்டிய முக்கியமான 5 விஷயங்களைப் பட்டியலிடுகிறது இந்த வார The Salary Account எபிசோடு.
Credits:
Voice :Radhika|
Sound Engineer : R. Navin Bala |
Podcast Channel Executive : Prabhu Venkat. P |
Podcast Network Head : Niyas Ahmed. M.
-
வணக்கம்!
புதிய நிதியாண்டு தொடங்கிவிட்டது. சம்பளதாரர்கள் அனைவருக்கும் அண்மையில் முடிந்த நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வதுதான் முதலில் ஞாபகத்துக்கு வரும். கூடுதலாக வரி கட்டியவர்கள், வருமான வரித் துறையிடம் கூடுதலாகக் கட்டிய பணத்தைத் திரும்பப் பெறவேண்டும் எனில், வருகிற ஜூலை 31-ம் தேதிக்குள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்தாக வேண்டும். அதற்கான வேலையை இதுவரை செய்ய வில்லை எனில், உடனடியாக அதில் இறங்குவது நல்லது.The Salary Account எபிசோடு.
Credits:
Voice :Radhika|
Sound Engineer : R. Navin Bala |
Podcast Channel Executive : Prabhu Venkat. P |
Podcast Network Head : Niyas Ahmed. M.
-
மத்திய அரசு அண்மையில் செய்த ஒரு சட்டத்திருத்தம், மியூச்சுவல் ஃபண்டுகள், கோல்டு இ.டி.எஃப்கள், நேரடி தங்க ஆபரணங்கள் எனப் பல முதலீடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அது ஏற்படுத்தும் தாக்கம் என்ன, இனிமேல் நேரடியாக தங்கம் வாங்குவது லாபகரமாக இருக்குமா உள்ளிட்ட முக்கியமான கேள்விகளுக்கு விடையளிக்கிறது இன்றைய The Salary Account எபிசோடு.
Credits:
Voice :Radhika|
Sound Engineer : R. Navin Bala |
Podcast Channel Executive : Prabhu Venkat. P |
Podcast Network Head : Niyas Ahamed. M.
-
வணக்கம்!
பெரும்பாலான தொழிலாளர்களுக்கு ஓய்வுக்காலத்திற்கான ஒரே நம்பிக்கையாக இருப்பது சேமநல நிதி எனப்படும் PF (Provident Fund) முதலீடுதான். இந்தத் தொகையை திருமணச் செலவுகளுக்காக எடுப்பது எப்படி என்றும், அப்படி எடுத்தபின் என்ன செய்யவேண்டும் என்பது குறித்தும்தான் இன்றைய The Salary Account எடிஷனில் பார்க்கப்போகிறோம்.
*****
To Subscribe Nanayam Vikatan: https://bit.ly/3V6hb2x
Credits:
Voice :Radhika|
Sound Engineer : R. Navin Bala |
Podcast Channel Executive : Prabhu Venkat. P |
Podcast Network Head : Niyas Ahamed. M.
- Mostra di più