Folgen
-
தோனியின் வாழ்க்கையில் வெற்றிகள் சாதாரணமாக கிடைக்கவில்லை. அதற்குப் பல தடைகளும், மறைமுகமாக தடை விதித்தவர்களும் ஏராளம். யார் அவர்கள் ? தோனியின் கனவு நிறைவேறும் சமயத்தில் வந்த தடைகள் என்ன? அந்த தடைகளை உடைக்க தோனி செய்த சாதனைகள் என்ன ? பதட்டமும் ,சந்தோஷமும், கலக்கமும் நிறைந்த இந்த நம்ம தல தோனியை கேட்கத் தவறாதீர்கள் .
-
எல்லா திறமைகளையும் மேடை தேடி வருவதில்லை.. மேடை கிடைக்காமலே மறைந்து போன திறமைகள் உண்டு. தன் கனவுகளை வெல்ல விடாமல் போராடுபவருக்கே மேடையேறும் வாய்ப்பு கிடைக்கும். அடுத்தடுத்த தோல்விகளால் மனம் வெந்த தோனி, அலுத்துப்போய் அரசாங்க வேலைக்கே போய்விடலாம் என்று நினைத்த போது, தோனிக்கு வந்த வாய்ப்பு .
M.S தோனி தொடரை தவறாமல் கேளுங்கள் ..
-
Fehlende Folgen?
-
உள்நாட்டில் பல விமானங்களில் பயணித்திருந்தாலும் முதல் முறையா இந்திய அணிக்காக விளையாடுவதற்காக வெளிநாட்டுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் வந்தது. இந்திய அணியில் விளையாடுவது ஒரு சந்தோசம், வெளிநாடு செல்வது மற்றொரு சந்தோசம் என குதுகலமாக களமிறங்கினார் தோனி. ஆனால் நடந்தது என்ன?M.S தோனி தொடரை தவறாமல் கேளுங்கள் ..
-
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியுமா அந்த அடியை ! பாகிஸ்தானுக்கு எதிரான தோனியின் முதல் சதம் ! ஏன் மகேந்திர சிங் தோனி அணியில் இருக்க வேண்டும் என்ற கேள்விகளுக்கு விடை மட்டும் அல்ல, அதிரடியாக ஆடக்கூடிய ஒரு விக்கெட் கீப்பரை தேடிக்கொண்டிருந்த இந்திய அணிக்கும் விடை கிடைத்தது அன்று. அந்தப் போட்டியில் 148 ரன்களை குவித்து ஆட்டநாயகன் விருதையும் பெற்றார் தோனி. அதன் பின்பு நடந்தது எல்லாம் வரலாறு.
M.S தோனி தொடரை தவறாமல் கேளுங்கள் .
-
145 பந்தில் 15 பவுன்டரி, 10 சிக்ஸர் விளாசி 183 ரன்கள் குவித்து நாட் அவுட்டாக இருந்தார் டோனி . அடப்பாவிகளா இலங்கை இன்னும் கொஞ்சம் ரன் கூட எடுத்திருந்தா ஒருதின போட்டியில் முதல் முறையா இரட்டை சதம் அடித்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காராய் இருந்திருப்பார் தோனி என ரசிகர்கள் டோனியை கொண்டனார்கள் . அந்த மேட்ச்க்கு பிறகு தோனியின் கேரியர் வேற லெவலு!!!
M.S தோனி தொடரை தவறாமல் கேளுங்கள் ..
-
நம்ம எல்லாருக்குமே நம்ம வாழ்க்கையை மாற்றக்கூடிய வாய்ப்புகள் கடந்து போகும் .. யார் அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்கிறார்களோ அவர்கள் தான் வரலாற்றில் வெற்றியாளர் இடத்தை பிடிப்பாங்க. அப்படி சாதித்தவர் தான் நம்ம 'தல' தோனி. உலகத்துல எல்லா மனுசனுக்கும் வாழ்க்கையை பற்றிய பயம் இருக்கும் , சில பேருக்கு எப்படியாவது வேலை கிடைத்தால் போதும்னு இருக்கும் , சில பேருக்கு நாலு காசு சம்பாதிச்சாலும் அது நான் ஆசைப்பட்ட வேலையா இருக்கணும்னு நினைப்பாங்க. அதேதான் தோனிக்கும் நடந்தது.. என்ன நடந்தது ?M.S தோனி தொடரை தவறாமல் கேளுங்கள்
-
முதல் டி 20 உலகக்கோப்பை போட்டியில் விளையாடுவதே செம கெத்து. அதுவும் இந்தியா மாதிரி 120 கோடி மக்களின் சார்பாக விளையாடும் அணிக்கு தலைவனாக பொறுப்பேற்று விளையாடுவது என்றால் சும்மாவா ? தோனியை கேப்டனாக்க சச்சின் என்ன சொன்னார்?
M.S தோனி தொடரை தவறாமல் கேளுங்கள் ..
-
2007 - 2011 தோனியின் வாழ்க்கையில் சரி, இந்திய கிரிக்கெட்டிலும் சரி அது ஒரு பொற்காலம். இந்தியா கிரிக்கெட் உலகில் தனி ராஜாங்கம் நடத்தியது. அதற்கு முக்கிய காரணம் இந்திய அணிக்கு தலைமையேற்று இருந்த மகேந்திர சிங் தோனி. 2013 சாம்பியன்ஸ் டிராபி, 2018இல் டாடிஸ் ஆர்மினு கிண்டல் பண்ண அணியோடு மீண்டும் ஐ.பி.எல். கோப்பையை வென்று கேப்டன் கூல் எப்பவும் தலன்னு நிரூபித்தார். 2021 வரை இதோ முடிந்ததுன்னு சொல்லும் போதெல்லாம் Definitely notன்னு bounce back பண்ற தல தோனிக்கு இது நம்ம சின்ன மரியாதை.மகேந்திர சிங் தோனி தொடரைக் கேளுங்கள்.
-
தடைகளைத் தகர்ப்பது தோனிக்கு பெரிய விஷயம் இல்லை. 15 வயசுல இருந்து தன்னோட வாழ்க்கையை தானே செதுக்கியவர். பேட்டிங் ஆர்டர்ல ஏழாவதாக களம் இறங்கினாலும் , உள்ளே வந்ததும் 6 , 4 என்று பறக்கவிடுவார் நம்ம தல தோனி ! பல தடைகளைக் கடந்து தோனி பீகார் U -19 டீமுக்கு தேர்வானது எப்படி ? பல தடைகளைக் கடந்து தோனி ரஞ்சி கோப்பையில் விளையாடினாரா? நம்ம தல தோனி முதன் முதலில் சதம் எப்போது அடித்தார் தெரியுமா ?
M.S தோனி தொடரை தவறாமல் கேளுங்கள் ..